பிரிவு - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 19, 2018

பிரிவு

Boy :- 

சத்தமில்லாத இந்த இரவில்
நான் மட்டும் சத்தமாக
அழுது கொண்டிருக்கிறேன்.
அழகாக புன்னகை புரிந்து - உன்
அருகில் கதைபயின்று நடைபோட்ட 
அந்த இனிய தருணங்களை
எதைக் கொண்டு நிரப்பப்போகிறாய்? 
என் அன்புத் தோழியே 
என்னைத் தொலைத்து விட்டு
தொலைதூரம் போகப் போகிறாயா...?

Girl : -

நீயாவது சத்தமிட்டு அழுகிறாய்
அது கூட முடியவில்லை எனக்கு
ஏனெனில்
நான் சத்தமிட்டு அழுதால்
நம் புனிதமான நட்பிற்கு காதல் என்று பெயர் வைத்து
காற்றில் கலக்க விட்டுவிடுவார்கள்.
உள்ளுக்குள்ளேயே அழுது
இரத்தக்கண்ணீர் வடிக்கிறது
என் இதயம்.
நான் தான் உன்னைவிட்டுப் போகிறேன்
என் நட்பல்ல
நண்பனே இப்போது எனக்கு விடைகொடு
எம் நட்பிற்கு எப்போதும்

விடை கொடுத்து விடாதே.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here