வாஸ்து சாஸ்திரப்படி இதனை செய்து பாருங்க... யோகம் உங்கள் வீடு தேடி வருமாம்! - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 15, 2019

வாஸ்து சாஸ்திரப்படி இதனை செய்து பாருங்க... யோகம் உங்கள் வீடு தேடி வருமாம்!



வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும்.
அந்தவகையில் வாஸ்து சாஸ்திரப்படி இங்கு சில வாஸ்து குறிப்புகள் உள்ளன. தற்போது அதனை பார்ப்போம்.
  • கடலில் இருந்து எடுத்த கிரிஸ்டல்களை (கிளிஞ்சல்) அதிக நேரம் வசிக்கும் அறையில் வைத்தால் எதிர்மறையாக எண்ணங்கள் மறையும். கிழக்கு பக்கமுள்ள அறையில் அதிக நேரம் வசிப்பதால் முக அழகு கூடும். கவர்ச்சியும் தரும்.
  • நான்கு பக்கமும் ஒரே அளவாக சதுரமாக இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு உடல்நலம் தரும்.
  • மேற்கு பகுதி உயரமானால் மேன்மை தரும். கடின உழைப்பு, தியாக மனப்பான்மை, ஆராய்ச்சி செய்யும் அறிவு, விஞ்ஞான கண்ணோட்டம், உயர்நிலை பெரும் யோகம் இவைகளை தரும்.
  • சூரியனின் ஒளிக்கதிர்கள் வீட்டின் எப்பகுதிகளிலாவது விழும்படி சன்னல், கதவுகளை அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோயின் எதிர்ப்பு சக்தி கூடி வரும். கிருமிகளால், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு குறையும்.
  • வீட்டின் சுற்றுப்புற சுவரின் மூலையில் எவ்விதமான கட்டிடமும் கட்டக்கூடாது. முக்கியமாக வடகிழக்கு, தென்மேற்கு மூலைகளை இணைத்து சிறிய கூடமோ கழிப்பறையோ கட்டக்கூடாது. அவ்விதம் கட்டினால் அந்த வீட்டின் உரிமையாளர் அதில் வசிக்க இயலாது. வாடகைக்கு விடும் சூழ்நிலை ஏற்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here