போயிங் 737 மேக்ஸ் விமானங்களை உடனடியாக தரையிரக்க உத்தரவு - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 11, 2019

போயிங் 737 மேக்ஸ் விமானங்களை உடனடியாக தரையிரக்க உத்தரவு

எத்தியோப்பியா விமானம் விபத்திற்குள்ளாகி 157 பேர் உயிரிழந்ததை அடுத்து போயிங் 737 மேக்ஸ் விமானங்களை உடனடியாக தரையிறக்க அனைத்து சீன விமான நிறுவனங்களுக்கும் அ்நநாட்டு விமான போக்குவரத்து துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.




எத்தியோப்பியாவில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் அதில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்ததையடுத்து, அந்த விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனம் விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு நேற்று உள்ளூர் நேரப்படி மணி 8.44க்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், எட்டு விமானப் பயணிகள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இதே ரக விமானம் ஒன்று கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்தியோனீசியா அருகே கடலில் விழுந்து நொறுங்கி 190 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து குறித்த விமானங்ளை உடனடியாக தரை இறக்குவத்தற்கு அந்நாட்டு விமான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image result for ethiopia boeing 737

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here