உங்களது வீட்டில் செல்வ வளம் 2 மடங்கு அதிகரிக்க வேண்டும்? இவற்றை செய்திடுங்க - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 12, 2019

உங்களது வீட்டில் செல்வ வளம் 2 மடங்கு அதிகரிக்க வேண்டும்? இவற்றை செய்திடுங்க

இன்றைய காலத்தில் பலரும் எவ்வளவு உழைத்தாலும் பணம் கையில் நிக்கமாட்டீங்குது என்று புலம்பி கொண்டிருப்பார்.
இதற்கு வாஸ்து சாஸ்திரமும் ஒரு காரணமாக கருதப்படுகின்றது.
பொதுவாக வாஸ்து படி ஒரு வீட்டில் அனைத்து அமையப்பெற்றாலே அந்த வீட்டில் நேர்மறை சக்தி அதிக அளவில் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அப்படி அமையாவிட்டால் எதிர்மறை சக்தி இருக்கின்றது என்று அர்த்தம்.
அந்தவகையில் நமது வாழ்க்கையில் மற்றும் வீட்டில் செல்வ வளம் பெருக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வாஸ்து முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
  • பணம் கைமாறும் நேரங்களில், அடர் நிறமாக இல்லாமல் லைட் கலர்ஸ் ஆடைகளை அணிந்து செல்லுங்கள் அல்லது அந்த நிறத்தில் ஒரு கைகுட்டையாவது கைகளில் வைத்திருங்கள்.
  • எப்போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதையே வழக்கமாக கொண்டிருங்கள். வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பதை தவிர்த்திடுங்கள். இத்திசையில் படுத்தால் அதிக சோம்பல் குடிகொள்ளும்.
  • நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும்.
  • உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த போட்டோக்கள் இது போன்று வீட்டினுள் வைத்திருக்கக் கூடாது.
  • கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே, வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் மாட்டக் கூடாது.ஏனெனில் தெற்கு எமதர்மராஜாவின் திசையாகும். கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.
  • தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை, துணியை அலசிய பின்னர் உதிரும் தண்ணீர், துடைப்பத்தின் புழுதி, முற்றத்தின் காற்று முதலியவை உடலில் பட்டால் தரித்திரம் பெருகும்.
  • செல்வத்தின் அதிபதியான குபேரன் ஊறுகாய் பிரியர். அதனால் வீட்டில் பல வகையான ஊறுகாய்கள் இருந்தால் அங்கே குபேரன் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை.
  • மூன்று நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைக்க கூடாது. ஒரே ஆடையை அடிக்கடி அணிந்தாலும் செல்வ வளம் குறைந்திடும். உடுத்திய துணியை வீட்டின் கதவுகளில் தொங்கவிடக்கூடாது.
  • வாழை பூவை வீடுகளின் முன்பு, அல்லது வியாபார இடங்களின் முன்பு கட்டி வைத்து வாரம் ஒரு முறை மாற்றி வர கண் திருஷ்டி அகன்று வியாபாரம் விருத்தி அடையும். இது அனைவரின் பார்வை படும்படி இருக்க வேண்டும்.
  • வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதேபோல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேல் கண்ணாடி இருக்க வேண்டும்.
  • பால்,தேன், தாமரை, தானியக்கதிர்,நாணயங்கள் இவை லட்சுமியின் அடையாளங்கள். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். இதனை வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்திருந்தால் தொழிலுள்ள தடை நீங்க லாபம் கிடைக்கும்.
  • வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
  • வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
  • வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர் சக்திகளை ஈர்க்கும். இது பூமி தோஷத்தை உண்டாக்கும். அதே போல வீட்டிற்குள் முட் செடிகளும் இருக்க கூடாது.
  • பணப்பெட்டியில் மல்லிகைபூ, ஏலக்காய் ,பச்சைகற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்.
  • வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்துவதுடன் அதிர்ஷ்டத்தையும் தடுத்திடும்.
  • சுடுகாட்டுக்கு அருகில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும். வறுமை,அவமானம் உண்டாக்கும்,பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
  • வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.
  • வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
Image result for laxmi with money

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here