வாகன ஓட்டிகளைக் கண்காணிக்க புதிய கமரா! - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 27, 2019

வாகன ஓட்டிகளைக் கண்காணிக்க புதிய கமரா!

- ஆஸ்திரேலியா
விக்டோரியா மாநிலத்தில் போக்குவரத்து கண்காணிப்பை மேற்கொள்ளும் பொலிஸ் வாகனங்களில் Number plate recognition வசதிகொண்ட  விசேட கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வீதியில் செல்லும் வாகனங்களின் இலக்கத்தகடுகளை ஒரே பார்வையில் ஸ்கான் செய்து iPad app வழியாக பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கும் வகையில் இக்கமரா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பதிவு செய்யப்படாத அல்லது திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்துச் செய்யப்பட்டவர்களை இலகுவாக கண்டறிய முடியும்.
இவ்விசேட கமரா பொருத்தப்பட்ட முதலாவது வாகனம் கடந்தவாரம் முதல் Bendigo பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இவ்வாண்டு நடுப்பகுதிக்குள் 38 கார்களில் இவ்விசேட கமரா பொருத்தப்படும் அதேநேரம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் விக்டோரியாவிலுள்ள 281 கார்களுக்கு இவை பொருத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 மணிநேரத்திற்குள் சுமார் 5000 வாகன இலக்கத்தகடுகளை ஸ்கான் செய்யும் வல்லமை ஒவ்வொரு கமராவுக்கும் உண்டு.
அதேபோன்று போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸார் எவரிடமாவது விசாரணை செய்யும்போது அல்லது வீதி நிறுத்தங்களில் என்ன நடைபெறுகிறது என்பதை முழுமையாக பதிவுசெய்யும் நோக்கில் மற்றொரு கமராவும் இக்கார்களில் பொருத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here