ஷீரடி சாயிபாபா வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம் - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 10, 2019

ஷீரடி சாயிபாபா வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம்

ஷீரடி மகானின் தோற்றம் :

பாரத மக்களாகிய நாம் வாழும் இப்புண்ணிய பூமியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாவட்டத்தில், 'ஸாயிபாபா' ஒரு சின்னஞ்சிறு குக் கிராமமான ஷீரடியில் 16 வயது நிரம்பிய வாலிபனாக, கடவுளின் அவதார புருஷனாக பாமர மக்களின் முன்னிலையில் காட்சி அளித்தார். ஷீரடி மிகவும் எளிமையான மக்கள் வாழும் ஊர். அங்கு ஒரு வேப்பமரம், மசூதி, ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பல சிறு சிறு கோயில்கள் அருகாமையில் இருந்திருக்கின்றது. அவர் காலம் 1854ம் ஆண்டு அவர் வேப்ப மரத்தடியில் தியான நிலையில் அமர்ந்திருந்த காட்சியை மக்கள் பார்த்து வியந்தனர். கடும் குளிர், வெப்பம், பகல், இரவு எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்காது நல்ல அழகும், சுறுசுறுப்பும் உள்ளவனாக காட்சி அளித்தான். இந்த காட்சி மக்களுக்கு புரியாத புதிராகவும் இருந்து வந்தது.



சில நாட்களிலேயே அந்த ஊர் மக்கள் அவரை "சா" என்றழைத்தார்கள். "சா” என்றால் கடவுள் என்று பொருள். அம்மக்கள் பாபாவை நம் காலத்தில் தோன்றிய அவதார புருஷன் என்று போற்றினார்கள். ஆரம்ப காலத்தில் "ஸாயிபாபா"சில வீடுகளில் பிட்சை கேட்பதை வழக்கமாக வைத்து வாழ்க்கையை ஓட்டினார். சில வீடுகளில் பிச்சை கேட்டால் இல்லை என்று ஒருசில பெண்கள் கூறிவிடுவார்கள். அவர் அவற்றைப் புரிந்து கொண்டு, என் வீட்டில் இன்ன சமையல் என்பதையும் ஞான நிலையில் கூறிவிடுவார். அப்பெண்கள் வியந்து போய் பாபாவைத் தேடி வந்து உணவு அளிக்க ஆரம்பித்தனர். பாய்ஜாபாய் என்ற பெண்மணி! நாள்தோறும் உணவு கொடுத்தாள். அவளுக்கு பாபா ஆசீர்வதித்தார். சாந்த்பட்டேல் என்பவர் காட்டு வழியில் சென்று கொண்டிருந்த போது புகைபிடிக்க நெருப்பு இல்லையே, தீக்குச்சி இல்லையே என்ற சமயம் பாபாவிடம் சென்று நெருப்பு கேட்க அவர் தம் கையில் உள்ள 2 கம்புகளை வைத்து தீயை வரவழைத்துக் கொடுத்தார். மிக அதிசயத்தோடு சாந்த்பட்டேல் பாபாவைத் தரிசித்து அவர் காலடியில் விழுந்து வணங்கி மிக உயர்ந்த குடும்பத்தில் பிறந்த ராதாகிருஷ்ணமாயி என்ற பெண் சேவை நோக்கத்தோடு தாமாகவே முன்வந்து ஆசிரமத்தை நாள்தோறும் பெருக்கிச் சுத்தம் செய்தார். சீரடி தாம் வைத்திருந்த மந்திர மண்பானையில் சமைப்பார். ஒவ்வொரு முறையும் அவர் சமைத்த உணவு எத்தனைபேர் வந்தாலும்
போதுமானதாய் வளர்ந்து கொண்டிருக்கும். ஒரு சத்புத்திரரின் கை அன்னபூரணியில் அட்சய பாத்திரத்தை திறந்து விடும் என்பதுதான்..!

சாய்பாபாவுக்கு குழந்தைகளிடம் விளையாடி மகிழ்விப்பதில் அதிக ஆர்வம். நகைச்சுவையுடன் பேசி சிரிக்க வைப்பார். சாயிபாபா தன் பக்தர்களின் ஆனந்த மயான பாடல்களைக் கேட்டு களிப்பார். ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து அவர்களையும், கலைகளையும் மகிழ்ச்சி ஏற்படுத்துவார். அவர்
இசையின் மூலம் தெய்வீக அனுபவம் பெற்றார். நடராஜர் போல் உலகங்களையும் ஆட்டி வைத்திருக்கும் நடனத்தின் மூலம் தன்னுள் ஐக்கியமாகி விடுவார். பாபா துன்பப்படுபவர்களுக்கு
ஒரு தாயைப் போல் இருந்து தம் அன்பையும் ஆதரவையும் அளித்து வந்தார், தொழுநோயாளியின் கால் புண்ணைக் கூட கழுவிச் சிகிட்சை புரிந்தார். அவர் சாஸ்திரங்கள், கீதை, குர்ரான். ஆகியவற்றைப்பற்றி முழுவதும் அறிந்து வைத்திருந்தது பெரும் பண்டிதர்களைக்கூட ஆச்சரியத்தில் மூழ்கச் செய்வதாய் இருந்தது. அவர் அவதார நாயகர் ஆதலால் எளிதாக இருந்தது.



துவாரகாமாயி தர்பாரில் பாபா வீற்றிருந்தார், அவனி மக்கள் சாய் மகராஜ் என்று போற்றி வாழ்த்தி வழிபட்டனர். அனைத்து நோய்களுக்கும் மக்கள் விபதியை அருமருந்தாகக் கருதி எடுத்துக் கொண்டனர். நூறு ஆண்டுகளுக்கு முன் பாய் மூட்டிய நெருப்பிலிருந்து எடுக்கப்படும் சாம்பல் தான் விதி மகாராஜா போல பாபா தன் பக்கதர்களுடன் துவாரம் மாயிலிருந்து சாவடிக்கு ஊர்வலமாக செல்வது அந்த காட்சியாய் இருக்கும். பாபா விதைக்கும் ஒவ்வொரு விதை முளைத்து செடிகளாகி, மரங்களாகிப் பத்துக் குலுங்கும். அவர் கைகளை பசுமை நிறம் வீசும் மரகதக் கைகள் என சொல்லலாம். 1918 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18ம் நாள் சீரடி கிராமத்திற்கு பெரும் துயர நாள் ஆகும். இது பாரத தேசத்திற்கே நேர்ந்த துயரநாள் ஆகும். ஆயிரமாயிரம் பக்தர்களுக்கு விபூதி கொடுத்து உபதேசங்கள் புரிந்து, பேருதவியாய் விளங்கிய பாபாவின் உயிர் அன்று பிரிந்தது.
அன்று முதல் அவர் ஆத்மா அங்கு நின்று நம்மைக் காத்து ரட்சித்து வருகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here