இன்றைய நாள் (13-12-2018) - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 12, 2018

இன்றைய நாள் (13-12-2018)

"இழப்பு அல்லது பிரிவின்றி எவரும் ஒன்றின் அருமையை உணருவதில்லை...!" : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்.

13-12-2018 விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம்  நாள் வியாழக்கிழமை.

நாள்வியாழக்கிழமை
திதிசஷ்டி இரவு 11.50 வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்அவிட்டம் மாலை 6.25 வரை பிறகு சதயம்
யோகம்சித்தயோகம் மாலை 6.25 வரை பிறகு மரணயோகம்
ராகுகாலம்பகல் 1.30 முதல் 3 வரை
எமகண்டம்காலை 6 முதல் 7.30 வரை
நல்லநேரம்காலை 10.45 முதல் 11.45 வரை
சந்திராஷ்டமம்புனர்பூசம் மாலை 6.25 வரை பிறகு பூசம்
சூலம்தெற்கு



மேஷம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்: உற்சாகமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிலருக்கு திடீர் பயணத்தின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணிகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கடகம்: மகிழ்ச்சி தரும் நாள். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.



சிம்மம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும் நாளாக இருக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகப் பணிகளை உற்சாகமாக முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கன்னி: மகிழ்ச்சியான நாள். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்பதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

துலாம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், பொறுமையுடன் அணுகுவது நல்லது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக் கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிகளின் காரணமாக சற்று சோர்வாக இருப்பீர்கள். வியா பாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்: மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு: எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மகரம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக் கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணம் மேற்கொள் வதையும் தவிர்க்கவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கும்பம்: தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.



மீனம்: உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக் கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. பாக்கித் தொகைக்காக வாடிக்கையாளருடன் சிறு சச்சரவு ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here