இன்றைய நாள் (06-12-2018) - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 5, 2018

இன்றைய நாள் (06-12-2018)

"கோபமாய் பேசும் பொழுது அறிவுதன் முகத்துக்கு திரையிட்டு கொள்கிறது...!" : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்.

06-12-2018 விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம்  நாள் வியாழக்கிழமை.

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக விமர் சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள்பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபா ரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.


சிம்மம்: எதிர்ப்புகள் அடங் கும்.மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாருக்கு வேலைச்சுமை, வீண்டென்ஷன்வந்துப் போகும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

கன்னி: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்து கொள்வார்கள். விசேஷங்களை முன் னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். எதிர்பார்த்தஇடத்திலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்து ணர்ச்சி பெருகும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன்நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். அதிகம் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

தனுசு: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பிள்ளை களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நவீன மின்னலை சாதனங்கள் வாங்கு வீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.

மீனம்: கடந்த இரண்டுநாட்களாக கணவன-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here