ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு ஆங்கில மொழிப்புலமை அவசியம் ? - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 2, 2018

ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு ஆங்கில மொழிப்புலமை அவசியம் ?

(Tanks - SBS tamil)

ஆஸ்திரேலியாவிலுள்ள வெவ்வேறு சமூக பின்னணிகளை கொண்ட மக்கள் ஆஸ்திரேலிய வாழ்க்கை முறைக்குள் உள்வாங்கப்படுவதற்கும் அதற்கான சமூக மட்ட முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கும் ஆஸ்திரேலிய அரசு கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஐந்து மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது என்று ஆஸ்திரேலியாவின் புதிய குடிவரவு அமைச்சர் David Coleman தெரிவித்துள்ளார்.

பன்மைத்துவத்துடனும் செழிப்பான குடிவரவுக்கொள்கையோடும் பயணிக்கின்ற ஆஸ்திரேலியாவில் சகல பின்னணிகளைக்கொண்ட மக்களும் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ்வதற்கு ஆஸ்திரேலியா சகலவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருவது சகலதும் அறிந்ததே. அந்த வகையில் கடந்த வருட வரவு செலவுத்திட்டத்திலும் ஒதுக்கப்பட்டுள்ள இந்த மானியத்தொகையை சமூக அமைப்புக்கள் முறையாக பெற்றுக்கொண்டு இந்த நாட்டில் தங்களது சமூகங்கள் பல்தேசிய கலாச்சார விழுமியங்களை முன்னெடுக்கும்வகையில் வாழ்வதற்கு பயன்படுத்தலாம்- என்று அமைச்சர் David Coleman மேலும் கூறியுள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் பேசும்போது அவர் மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டினார்.

அங்கு அவர் மேலும் கூறும்போது, ஆஸ்திரேலியாவில் உள்ள சகல சமூகத்தவர்களுக்கும் ஆங்கில மொழி மிகவும் முக்கியமானது என்றார். பிற சமூகங்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும் பொருளாதார முன்னேற்றங்களை எட்டுவதற்கும் வேலைவாய்ப்புக்களை பெருக்கிக்கொள்வதற்கும் ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையினுள் இணைந்துகொள்வதற்கும் ஆங்கிலமொழி அத்தியாவசியமானது. ஆகவே, ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா சமூகப்பின்னணிகளைக்கொண்டவர்களும் மற்றும் புதிதாக குடியேறுபவர்களும் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று David Coleman கேட்டுக்கொண்டார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here