ஐரோப்பிய நாடுகளில் daylight saving இனிமேல் கிடையாது? - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, October 29, 2018

ஐரோப்பிய நாடுகளில் daylight saving இனிமேல் கிடையாது?

ஐரோப்பிய நாடுகளில் கடந்த 16 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவந்த பருவகால நேரமாற்றம் -daylight saving இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருவதுடன் அடுத்த ஆண்டிலிருந்து கோடை காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நேர மாற்றம் இடம்பெற மாட்டாது என  எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதி வாரத்திலும் ஒக்டோபர் மாத இறுதி வாரத்திலும் இதுவரைகாலமும் இந்த நேரமாற்றம் இடம்பெற்று வந்தது.


ஐரோப்பிய நாடுகளில் ஒரே நேரத்தை பின்பற்றுவது தொடர்பாக கருத்துக்களை கேட்டறியும்வகையில் ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருந்தது. இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 46 லட்சம் பேரில் பெரும்பான்மையானவர்கள் - 84 வீதமானவர்கள் - ஒரே நேரத்தை பேணுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.வருடமொன்றில் இரண்டு தடவைகள் நேரத்தை முன்னும் பின்னும் ஒரு மணிநேரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
பொதுமக்கள் கருத்துக்களின் பிரகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. அங்கு அது நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒவ்வொரு நாடும் தங்களது முடிவுகளை அமுல்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here