இன்றைய நாள் (13-10-2018) - Star

Post Top Ad

Post Top Ad

Friday, October 12, 2018

இன்றைய நாள் (13-10-2018)

Responsive Ads Here

"வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிகப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்" : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ( 13.10.2018)...!

13.10.2018 விளம்பி வருடம் புரட்டாதி மாதம் 27 ஆம் நாள் சனிக்கிழமை



மேஷம்: இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சிறிசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பொறுமை காப்பது அவசியம். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், உடலும் மனமும் சோர்வடையும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையைக் கேட்பார்கள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.







மிதுனம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறு நீங்கும். லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும்.

கடகம்: தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அரவணைத்துச் செல்லவும். வெளியிடங்களில் உண்பதைத் தவிர்க்கவும். மாலையில் உறவினர்கள் வருகை சந்தோஷத்துடன் செலவுகளும் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியை காலையில் தொடங்குவது நல்லது.

சிம்மம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் கொள்ளாமல் இருப்பது அவசியம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும்,. எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.


கன்னி: எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் தேவையை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

துலாம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சக பணியாளர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.




விருச்சிகம்: காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோனம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனை சற்று குறைவாகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.


தனுசு: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் தேவையறிந்து அவருக்கு உதவுவீர்கள். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்: தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாகச் சில முடிவுகளை எடுப்பீர்கள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் ஏற்படும் நெருக்கடியை சமயோசிதமாகச் சமாளித்து, சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.




கும்பம்: தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் வீட்டில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.


மீனம்: இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

todayhoroscopesTamilvalai

No comments:

Post a Comment

Post Top Ad