கிருஷ்ணர் காட்சி தந்த தென் துவாரகை - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 20, 2018

கிருஷ்ணர் காட்சி தந்த தென் துவாரகை



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது.

23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உறையும் ராஜகோபால சுவாமி, கிருஷ்ணரின் வடிவமாக அறியப்படுகிறது. குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்று அழைக்கிறார்கள்.

இங்கு அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் வாசுதேவப் பெருமாள் என்பதாகும். உற்சவரின் திருநாமம் ராஜகோபால சுவாமி. தாயாரின் பெயர், செங்கமலத் தாயார். இது தவிர செண்பக லட்சுமி, ஹேமாம்புஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண் டாப் பத்தினி ஆகிய திருநாமங்களிலும் தாயார் அழைக்கப்படுகிறார். உற்சவரின் பெயரான ராஜகோபால சுவாமி என்ற பெயரிலேயே ஆலயம் விளங்குகிறது.



இத்தல இறைவனின் திருவுருவம் 12 அடி உயரம் கொண்டது. ஆலயத்தின் வளாகமானது, 16 கோபுரங்களுடன் 7 தூண்கள், 24 சன்னிதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் கொண்டு திகழ்கிறது. இத்தல உற்சவர் சிலை வெண்கலத்தால் ஆனது. இது சோழர் காலத்தைச் சேர்ந்த தாகும். இந்த ஆலயத்தில் காணப்படும் ஒரு குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இதனை ‘ஹரித் திராந்தி’ என்று அழைக்கிறார்கள். ஆலயத் தின் நுழைவு வாசலில் மழை நீர் சேகரிப்பதற் காக ெபரிய தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள் ளது. ஹரித்ராந்தி நதி தவிர துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.

திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது, தென்பகுதியில் கோபிலர், கோபிரளயர் என்னும் இரண்டு முனிவர்கள் இருந்தனர். இவ்விருவரும் கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை நோக்கி புறப்பட்டனர். அப்போது வழியில் அவர்களை சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்து விட்டதாக கூறினார்.


அதைக்கேட்ட முனிவர்கள் வருத்தம் அடைந்தனர். அவர்களை ஆறுதல்படுத்தி தேற்றிய நாரதர், இருவரையும் கண்ணனைக் காண தவம் இருக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி முனிவர்கள் இருவரும் கடுமையான தவத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இறைவன், ‘கிருஷ்ணராக’ காட்சி தந்தார். அவரிடம் தங்களின் லீலைகளை காட்டி அருளும்படி முனிவர்கள் வேண்டினார்கள். அதன்படி கிருஷ்ணர் தன்னுடைய 32 லீலைகளைக் காட்டி அருளினார். பின்னர் முனிவர்களின் வேண்டுதலுக்காக, இந்தத் தலத்தில் கிருஷ்ணர் எழுந்தருளினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.

உற்சவர் ராஜகோபால சுவாமி, இந்த ஆலயத்தில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து, அதையே தலைப்பாகையாக சுருட்டி வைத்துள்ளார். வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தைகள் அணியும் அணிகலன்களை அணிந்திருக்கிறார். அவரோடு ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.

இத்தல இறைவனுக்கு, மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்தியம் படைக்கப்படுகிறது. இங்கு வெண்ணைதாழி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.


நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ‘ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்’ என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதால் ‘சென்பகாரண்யா ஷேத்திரம்’ எனவும், முதலாம் குலோத்துங்க சோழன் இக்கோவிலை அமைத்த காரணத்தால் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் கொண்டிருப்பதால் ’ராஜமன்னார்குடி’ என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோவில் கட்டியதால் ‘மன்னார்கோவில்’ என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோவில் குலோத்துங்கச் சோழனால், சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கி.பி. 1070-1125-ல் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டா டப்பட்டு வருகிறது. ஆலயத்தின் 18 நாள் உற்சவமாக பங்குனி உத்திர விழாவும், 12 நாள் உற்சவமான விடை யாற்றி விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இதில் விடையாற்றி உற்சவம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறும். இந்த ஆலயத்தின் ஆண்டு தோறும் ஆடிப்பூரம் அன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருள்வார். இந்த தேரோட்டத் திற்காக 1892-ம் ஆண்டு தேர் உருவாக் கப்பட்டது. பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.26½ லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டது.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here